Ads Area

மத்தியமுகாம் நளீர் பௌன்டேசனின் 10வது ஆண்டு நிறைவின் தகர விழாவும், மேலங்கி அறிமுகமும் !

 நூருல் ஹுதா உமர், ஏ.எச்.எம்.ஹாரீஸ்


கடந்த 10 வருடமாக மத்தியமுகாம், நாவிதன்வெளி, சவளக்கடை போன்ற பிரதேசங்களில் மக்களின் துயர நேரங்களில் முன்வந்து இன,மத, பிரதேச பாகுபாடுகள் கடந்து உதவிசெய்து வந்த மத்தியமுகாம் நளீர் பௌன்டேசன் சமுக சேவை மற்றும்  நலன்புரி சங்கத்தின் 10வருட நிறைவை முன்னிட்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மேலங்கி வழங்கும் நிகழ்வும் கடந்துவந்த பாதைகள் மீளாய்வு நிகழ்வும் சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் (26) அன்று இரவு இடம்பெற்றது.

நளீர் பௌன்டேசன் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள், மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த 2004.12.26 அன்று சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும் நளீர் பௌன்டேசன் அமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி வழங்கி வைக்கப்பட்டதோடு அதன் ஸ்தாபகர் ஏ.நளீர் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளரினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் எம்.ஐ.நௌபர், YMMA பேரவையின் தேசிய செயற்திட்ட தவிசாளர் கே.எல்.சுபைர், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருள் ஹுதா உமர், ரிஸா மார்க்கெட்டிங் சென்டர் உரிமையாளர் எஸ்.எம்.ரினோஸ், , நளீர் பௌன்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் ஏ.நளீர், அமைப்பின் தலைவர் எம்.ஏ.ரஹீம் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe