பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்துடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் பஸ்கள் மற்றும் வேன்கள் என்பன போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளில் போசாக்கு திட்டத்திற்கு மேலதிகமாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களில் 10,150 பாடசாலைகளை உள்ளடக்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் அனைத்து மாகாண பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கல்வி அமைச்சின் செயலகத்தினால் மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
”பாடசாலை நேரம் முடிந்ததும், தனி வகுப்பு என, வெளியூர் என செல்லும் மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.