(ஏ.பி.எம்.அஸ்ஹர், நூருல் ஹுதா உமர்)
கல்முனை அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா மன்னர் பைசல் கேட்போர் கூடத்தில் அரபுக்கல்லூரி கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவின் பேராசிரியரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிதியாக கல்லூரியின் ஆளுநர் சபைத்தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்
பட்டமளிப்பு விழாவையொட்டி நினைவு மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தலைவர் ஏ.எல் நாஸிர் கனி ஹாமி நிகழ்த்தினார். இங்கு 105 மெளலவிகளுக்கும் 23 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது . தமது திறமைகளை வெளிப்படுத்திய இக்கல்லூரியின் பழையை மாணவர்கள் சிலரும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்குப்பங்காற்றிய முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆளுனர் சபை உறுப்பினர்கள் சிலரும் இங்கு பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உலமாக்கள் புத்திஜீவிகள் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேராசிரியரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி எம்.எஸ்.எம்.சலீமும் பாராட்டி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.