Ads Area

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியர் சுபைர் ஆசிரியர் சேவையிலிருந்து ஒய்வு..!

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


மூன்று தசாப்த காலமாக ஆசிரியராக கடமையற்றி ஒய்வு பெற்று செல்லும் ஏ.டபிள்யூ.எம்.சுபைரின் சேவை நலன் பாராட்டு விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின்(தேசிய பாடசாலை) சேர் றசீக் பரீட் கேட்போர் ௯டத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் அண்மையில்(21)இடம்பெற்றது.

ஆசிரியர் ஏ.டபிள்யூ.எம்.சுபைர் இலங்கை ஆசிரியர் சேவையில் 1992ம் ஆண்டு இனைந்ததிலிருந்து சாய்ந்தமருது கமு/கமு/அல் - கமரூன் வித்தியாலயம்,
கமு/கமு மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை),கல்முனை கமு/கமு அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை)ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியதுடன் 2014ம் ஆண்டு தொடக்கம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியராக தன்னை இனைத்து கொண்ட இவர்  சுமார் 08 ஆண்டுகள் இக் கல்லூரிக்கு சேவையாற்றியதுடன் எதிர்வரும் (2022.12.31)அன்று தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 

ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவினை சங்க தலைவா் அலியாா் றிபான், நிருவாக உறுப்பினர் முஸ்தபா ஹக்கீம் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். 

ஆசிரியர் ஏ.டபிள்யூ.எம்.சுபைர் மூன்று தசாப்த சேவையினை பாராட்டி விஞ்ஞான ஆய்வுகூட பொறுப்பதிகாரி முஜாஹிரினால் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டதுடன்,கல்லூரி சார்பான நினைவு பரிசினை கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம்.அமீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தரம் 06 தொடக்கம் 13 வரையான பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் நினைவு பரிசில்கள்,பொன்னாடை போற்றி தமது உளப்பூர்வமான கெளரவத்தை வழங்கினர்.

நிகழ்வில் அதிபர், பிரதி, உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள் ஏ.டபிள்யூ.எம்.சுபைர்  ஆசிரியர் பற்றி கடந்து வந்த நினைவலைகள் சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம்.மசூது லெவ்வை,ஆர்.எம்.அஸ்மி காரியப்பர்,உதவி அதிபர்களான ஏ.எச்.நதீரா,
எம்.எஸ். மனுனா,என்.டி.நதீகா,பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஒய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியர் ஏ.டபிள்யூ.எம்.சுபைர்  மஹ்மூத் மகளிர் கல்லூரியில் விவசாயம்,செயன் முறை தொழில்நுட்பம், விஞ்ஞான பாட ஆசிரியராக, சித்திரைக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக, பாடசாலை விடுதி குழுவின் உறுப்பினராக, பாடசாலை சுற்றுச்சூழல் கழகம் உருவாக்கத்தின் ஆரம்பகர்தாகவும்,
உயர்தர கலைப்பிரிவில் விவசாய பாட ஆசிரியராக, வகுப்பாசிரியராக,2016ம் ஆண்டு ஆரம்பம் செய்யப்பட்ட உயர்தர உயிர் தொழில்நுட்பம் பிரிவின் முக்கிய பங்காற்றியதுடன் 2018,2021 உயர் தர பரீட்சையில் மாவட்ட மாட்டத்தில் 03ம் மற்றும் 01ம் நிலைகளை பெற்று பாடசாலை வரலாற்று சாதனைக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர், அத்துடன் கல்லூரி மைதானம்,பயிர்ச்செய்கை,இயற்கை பெளதீக சுற்றுச்சூழல் அழகுபடுத்துதல்,உயர்தர மாணவிகளை பல்கலைக்கழக செல்லுவதற்கும் பாடசாலை வளர்ச்சி, அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அற்பணிப்புடன் சேவையாற்றிய ஒர் சிறந்த ஆசிரியர் ஏ.டபிள்யூ.எம்.
சுபையிரை வாழ்த்தி பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கின்றது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
3 / 5
4 / 5
5 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe