Ads Area

இன நல்லுறவை மேம்படுத்துவதற்கு அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க இணைப்பாளர்களுக்கு கலந்துரையாடல்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் அம்பாரையில்(29)இடம்பெற்றது.

அம்பாரை மாவட்டத்தில் நிலவுகின்ற நல்லிணக்க முரண்பாடுகளை இனங்கண்டு அதனை குறைப்பதற்கான செயற்ப்பாடுகளை அடையாளப் படுத்துவதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது

இதில் வை-சேன்ச்(y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி
டப்ளியு.எம்.சுரேகா,சமாதான தொண்டர்களான டி.டிலக்சினி,ஜே.சங்கீத்,எல்.சிரோத்,ஏ.எம்.ஹசினி, எம்.எம்.எம்.அஹ்னாப்,உட்பட அம்பாரை மாவட்ட  நல்லிணக்க இளைஞர் குழுக்களின் பிரதேச இணைப்பாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe