Ads Area

கிழக்கு மாகாண கராத்தே வர்ண விருது வழங்கும் விழா....!

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரைக்குமான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு வர்ண விருது வழங்கும் விழா கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நேற்று(24)நடைபெற்றது.

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன்,சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.மாஹிர்,தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பொறுப்பாளர் தாஹிர்,மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன்,கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன செயலாளர் எஸ்.மனோகரன்,அம்பாறை மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, திருகோணமலை மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் டி.எப். அலோசியஸ்,மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் சிஹான் கே.குககுமாரராஜா,
அம்பாறை மாவட்ட முன்னாள் விளையாட்டு அதிகாரி ஐ.எம்.நாபார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கிழக்கு மாகாணம் சார்பாக வெற்றிபெற்ற 82 வீரர்களுக்கு வர்ண விருது வழங்கப்பட்டதுடன்,கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தில் நீண்ட காலங்களாக சேவையாற்றிவருகின்ற சிரேஸ்ட போதனாசிரியர்கள் ஐந்து பேருக்கு அதி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதுடன்,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுத்தந்த சங்கங்களின் எட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு விசேட பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்IMA,RKOஆகிய சங்கங்களின் மாணவர்களினால் கராத்தே நிகழ்ச்சி கண்காட்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe