Ads Area

ஆளுநரின் செயலாளர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்.

 (எம்.எம்.அஸ்லம்)


கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க அவர்கள் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்தார்.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி ஆகியோரது ஆலோசனை, வழிகாட்டலுக்கமைவாக மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் ஆளுநரின் செயலாளரை வரவேற்று, மாநகர சபையின் தற்போதை செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இவற்றுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்தும் பிரதி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

மாநகர சபையின் நிதிப் பிரிவின் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்த ஆளுநரின் செயலாளர், வரி அறவீடுகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட வரவு- செலவு விடயங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார்.

இங்குள்ள டிஜிட்டல் நடைமுறை ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்மாதிரியான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் திண்மக்கழிவகற்றல் சேவை உள்ளிட்ட செயற்பாடுகள் பற்றியும் அவற்றின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

ஆளுநரின் செயலாளருடனான கலந்துரையாடலில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நெளஷாட், வருமானப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.அப்துல் அஹத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe