Ads Area

ஜாமியா நளீமியா கலாபீடத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதி.

 2022ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம்_ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 10, மற்றும் 11ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அதன் முதல்வர் அஷ்ஷெஷய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, வட மத்திய, வட மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10.12.2022 சனிக்கிழமையும்

கிழக்கு, மத்திய, மேல், தென் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 11.12.2022 ஞாயிற்றுக்கிழமையும் நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலமாக பிரதான நீரோட்டத்தில் நின்று கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் கற்கை நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

1- இஸ்லாமிய கற்கை நெறியில் சிறப்புத் தேர்ச்சி

2- பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

01. க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம், கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப் (C) பெற்றிருத்தல்.


02. 2005 .01 .31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.  

03. தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.  

பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்

1.பிறப்புச் சாட்சிப் பத்திரம் 

2.க.பொ.த (சா.த)பரீட்சை பெறுபேற்று அட்டை 

3.ஆள் அடையாள அட்டை 

4.மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்

5.புலமைச் சான்றிதழ்கள்


  பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும். 

எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும். 


நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும். 


கல்வி, விடுதி வசதிகள் அனைத்தும் இலவசம்.

உணவுக்கட்டணமாக ஒரு தொகை அறவிடப்படும்.

மேலதிக தகவல்களுக்கு 0776504765 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

முதல்வர், 

ஜாமிஆ நளீமிய்யா, பேருவளை



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe