உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, வேட்புமனுக்கோரல் குறித்த அறிவிப்பு, இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.