Ads Area

கல்முனைப் பிராந்திய உளநல பிரிவு சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட மேம்பாட்டு கலந்துரையாடல்.

 நூருல் ஹுதா உமர்


கல்முனைப்பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய உளநலப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரொஹான் ரத்ணாயக்க மற்றும் வைத்தியர் சிரோமி, பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ. வாஜித், கல்முனைப் பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே. நௌபல், பணிமனையின் பிரிவுத்தலைவர்களும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகளும் உள மருத்துவ சமூகப்பணியாளர் எம்.ஆர்.எம். ஹமீம், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

முதற்கட்டமாக சம்மாந்துறை, திருக்கோயில், நிந்தவூர், நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்சமூக ஆதரவு நிலையங்களில் பங்குதாரர்களாக பொலிஸார் மற்றும் கிராம நிலதாரிகள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சட்ட உத்தியோகத்தர்கள் உளவியலாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள பிரஜைகள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் இந்நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் ஒவ்வொரு தனிமனிதனதும் சுய கௌரவமும் பின்பற்றப்படவும் அரசாங்கத்தின் கொள்கைகளை இலகுவாக சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லவும் இந்நிலையங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்யும் என்றார். கல்முனைப் பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே. நௌபல் அவர்களினால் இந்நிலையங்களின் அமைவுச்சேர்க்கை மற்றும் பணிகள்  தொடர்பில் பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது டன் இந்நிலையங்களின் செயற்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் தாய் சேய் நலப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஸ்பின் அவர்களினால் இக்கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Slideshow

1 / 5
2 / 5
3 / 5
4 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe