Ads Area

அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க இணைப்பாளர்களுக்கான வதிவிட செயலமர்வு.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


 ஜி- சேர்ப்(G-CERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)  நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான03 நாள் வதிவிட செயலமர்வு(9/12/2022 தொடக்கம்11/12/2022 வரை) அம்பாரையில் இடம்பெற்றது.

இதில் வளவாலராக ரி.மோசஸ் கலந்து கொண்டதுடன்,
சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) தேசிய  பணிப்பாளர் ரி.தயாபரன்,வை-சென்ச்  வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் 
ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,எச்.எஸ்.ஹசனி,டப்ளியு.எம்.சுரேகா சமாதான தொண்டர் டி.சாலினி உட்பட அம்பாரை மாவட்ட  நல்லிணக்க இளைஞர் குழுக்களின் பிரதேச இணைப்பாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வன்முறையற்ற தொடர்பாடலும்,முரண்பாடுகளை 
கையாள்வதற்கான வழிமுறைகள்,அம்பாரை மாவட்டத்தில் இளைஞர் நல்லிணக்க குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க  செயற்ப்பாடுகள் பற்றி இதன் போது குறித்த செயலர்வில் கருத்துரைக்கப்பட்டது.

Slideshow

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe