Ads Area

தாய் சேய் நலப் பிரிவினால் கல்முனையில் சேவை பாராட்டு விழா.

 நூருள் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலப் பிரிவு மற்றும் அனைத்து பொது சுகாதார மாதுக்கள் இணைந்து சேவை பாராட்டு விழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாகவும் முன்னாள் தாய் சேய் நல பொறுப்பு வைத்திய அதிகாரியாகவும் சேவையாற்றும் வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் அவர்களின் கடந்த கால சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் தற்போது தாய் சேய் நலப் பிரிவிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார தாதிய உத்தியோகத்தர் ரீ. பத்மநாதன் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

இந்நிகழ்வில் முன்னர் ஒரு போதும் இல்லாத அளவிற்கு பொது சுகாதார மாதுக்கள் தமது கலை திறமைகளை வெளிக்கொணர்ந்து யாவரையும் ஆச்சரியத்திற்கும் ரசனைக்கும் உட்படுத்தியமை விசேட அம்சமாக இருந்தது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்களும், சுகாதார வைத்திய அதிகாரிகளும் அனைத்து பொது சுகாதார மாதுக்களும் பங்கு பற்றியிருந்தார்கள் 

இந்நிகழ்வின் போது கடந்த காலத்தில் தாய் சேய் நலப் பிரிவிலிருந்து சிறப்பாக சேவையாற்றியமைக்காக வைத்தியர் எம்.ஏ.சீ.எம்.பசால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
1 / 5
2 / 5
3 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe