இந்திய ரூபாயை" பயன்படுத்தி இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையைத் தவிர ரஷ்யா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் இதே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அதன்படி அந்த நாடுகள் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு "வொஸ்ட்ரோ" என்ற கணக்கை தொடங்க ஒப்புக்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதம் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.