அஸ்ஹர் இப்றாஹிம்
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிகுடியில் கடந்த சனிக்கிழமை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் கலைப்பிரிவு
நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கான கற்பித்தலுடன் கூடிய செய்முறை செயலமர்வு இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் எம். சபேஸ் குமார் அவர்களின் வழிகாட்டலிலும் கலைப்பிரிவு பகுதித்தலைவர் மற்றும் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இச் செயலமர்வுக்கு வளவாளராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.