Ads Area

போதை பயன்பாட்டாளர்களின் திருமணம் & ஜனாஸாவில் பங்கெடுக்க மாட்டோம் – சாய்ந்தமருது பெரிய பள்ளியும் அதிரடி அறிவிப்பு.

 போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் 2022.12.01 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய   மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை  எதிர்வரும் 2023 ஆண்டு முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்  அதனை வியாபாரம் செய்பவர்களின் ஜனாஸாக்கள் தங்களின் மையவாடியில் அடக்கம்  செய்யப்பட மாட்டாது எனவும் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


அவ்வாறானவர்களின்  பெயர் விபரங்கள் விளம்பர பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களின் விபரங்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய  ஜூம்மா  பள்ளிவாசல் அறிவித்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe