Ads Area

ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி.

 இன்று  அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தினால் ஏறாவூர், றஹ்மானியா பாடசாலை வீதி, எட்டாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் ஆட்டுக்காளை கருகி சாம்பலாகியுள்ளது.


கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே காளை அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலையிலிருந்து பாரிய இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய இடிமின்னலினால்  அன்வர் என்பவரின்  09 ஆடுகள், 11 பேட்டுக் கோழிகள், 04 சேவல்கள், 03 வாத்துக்கள் என்பவையே கருகி சாம்பலாகியுள்ளது.


இரு தட்டுக்களை கொண்ட காளையில் மேல் பகுதியில் ஆடுகளும், கீழ் பகுதியில் கோழிகளும் வாத்துக்களும் தங்கியிருந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe