Ads Area

பாலமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்.

 ( எம்.என்.எம்.அப்ராஸ்)


பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும்  தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமுகமாக  மாபெரும் இரத்ததான முகாம் சபையின் தலைவர் ஏ.எல்.சீத் தலைமையில் பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடாகியதுடன் இளைஞர்கள் யுவதிகள் என சுமார் 130 பேர் இரத்ததானம்  வழங்கினர்.

இரத்ததான நிகழ்வானது மேமன் எயிட் Memon Aid அமைப்பின் பிரதான அனுசரனையில் வை.எம்.எம்.ஏ (YMMA )பாலமுனை கிளை மற்றும் செடோ அமைப்பின் ஒத்துழைப்பில் நடைபெற்றது.

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா,முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில்,ரம்யா லங்கா பாலமுனை செயற்பாட்டாளரும் உளவள ஆலோசக உத்தியோகத்தர் எஸ்.ஆப்டீன்,அம்பாரை மாவட்ட (YMMA)வை.எம்.எம்.ஏ.தலைவர் அதிபர் எம்.எல்.எம்.றியாஸ்,செடோ தலைவர் ஏ.எல்.றிஸ்மி,அக்/மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுல்லா,அல்ஹிதாயா மகளிர் கல்லூரியின் அதிபர்  பீ.முஹாஜிரின், வை.எம்.எம்.ஏ.பாலமுனை கிளைத் தலைவர் எல்.சிறாஜ், ஆலோசகரும் விரிவுரையாளருமான எ.எச்.றிபாஸ்,மரண உபகார நிதியப் பணிப்பாளர் ஐ.பி.எம்.ஜிப்ரி,றம்யா லங்கா அமைப்பின் உறுப்பினர்களான எஸ்.எம்.உபைதுல்லாஹ் எஸ். டி.றஹ்மத்துல்லாஹ்,எம்.ஏ.மாஹிர்,எம்.எல்.றியாழ், றைஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர்  ஐ.எல்.எம்.பாயிஸ்,பாலமுனை-04 ஆர்.டி.எஸ்.தலைவர் எம்.எல்.அர்சாத்,எம்.எப்.பர்சாத்,ஜெஸ்மிர்,சமூக செயற்பாட்டாளர் ஏ.ஹில்மி,பாலமுனை இளைஞர்கள் சபையின் உப தலைவர் யூ.எல்.ஹஸ்ஸாலி,கே.எல்.றிபான்,எச்.எம்.றுகைமி அகமட்,செயலாளர் ஆர்.எம்.
சாமில்முகாமையாளர் எல்.எம்.ஹம்தான்,பொருளாளர் ஏ.றிகாஸ் அகமட்,அமைப்பாளர் எம்.ஏ.சிபான் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe