சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள வீரமுனை -01 பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட சனசமூக நிலையத்தின் அங்குரார்பண கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வீரமுனை வாசிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை (2022.12.11) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தஸ்லிமா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.