அமெரிக்கா B-21 என்ற அதிநவீன அணு குண்டு வீச்சு விமானத்தை அறிமுகப்படுத்தியது.
கலிபோர்னியாவின் பாம்டேலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விமானம் முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நார்த்ரோப் க்ரம்மன் தயாரித்த இந்த B-21 விமானம் மூலம் உலகின் எந்த இடத்திலும் துல்லியமான தாக்குதல் நடத்த முடியும் எனவும், எதிரி நாட்டின் மிகவும் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள்கூட B-21 விமானத்தை வானில் கண்டறிவது சிரமம் எனவும் கூறப்படுகிறது.