நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வருடம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சமூகமளித்திருந்த வேளையில் இந்த சாதனங்களின் தேவைகள் குறித்து பணிப்பாளரின் கவனத்திற்கு சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனீபா அவர்கள் கொண்டு வந்திருந்தார்.
பணிப்பாளர் அவர்களினால் அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்மைவாக இன்று கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது