சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி பொருற்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புடவைகட்டு வலையூற்று மற்றும் இரக்கண்டிமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு. 50லட்சம் ரூபாக்கு பெறுமதியான கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்புவேலை திட்டம் நேற்று நான்கு மீனவ குழுக்களுக்கு கையளிக்கப்பட்டது.
அத்துடன் சுமார் 50 லட்சம் ரூபாக்கு மேல் பெறுமதியான இரண்டு மீன் பிடிகள்படகுகள், இரண்டு இயந்திரங்கள் மீன்பிடி வலைகள்மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் 12 மீனவர்களுக்கு நேற்றைய தினம் ( 13-01-2023) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்கெளரவ அதிதியாக குச்சவெளி பிரதேச செயலாளர் திரு குணநந்தன் அவர்களும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பஸ்லான் அவர்களும் கலந்து கொண்டனர்.