சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான அரசசேவை உறுதி மொழியேற்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் அப்துல் மஜீட், நிதி உதவியாளர் வை.வீ.கதீசா உம்மா, வருமானப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஐ.எல்.ஸகீனா, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், நூலகர்கள், உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.