(ஏ.சீ.றியாஸ், எம்.என்.எம்.அப்ராஸ்)
ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் (Samagi Wihidum Balaganaya)திகாமடுல்ல மாவட்டப் பணிப்பாளராக கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் றிஸ்கான் முகம்மட் அவர்களுக்கு நேற்று (15.01.2023) நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நியமனம் களுத்துறை பனோரமா ஹோட்டலில் இடம்பெற்ற சமகி வரிசைப்படுத்தல் படையின் மாவட்ட மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே கலந்து கொண்டதுடன், நியமனத்தைப் பெற்றுக்கொண்ட றிஸ்கான் முகம்மட் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் அம்பாறை மாவட்டச் செயலாளராகவும் திறன்பட கட்சிப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.