ஸ்விட்சர்லாந்து நாட்டினுடைய உயர்தானிகர் திரு. Dr. Dominic Furgler கிழக்கு மாகாண விஜயத்தின் ஒரு தொடர்ச்சியாக இன்று (26/01/2023) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் முன்னணி அரச சார்பற்ற நிறுவனமான GAFSO நிறுவனத்தின் "சமூக ஒருமைப்பாட்டிற்கான பிராந்திய மையம்" ற்கு விஜயம் செய்திருந்தார்.
இந் நிகழ்வானது GAFSO நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் A.J. Kamil Imdad தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை சிரேஷ்ட்ட கௌரவ உறுப்பினர்கள்,
மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் சிரேஷ்ட, கௌரவ உறுப்பினர்கள் மற்றும் தாவீதன்வெளி பிரதேச சபையை பிரதிநிதித்துவப் படுத்தி அதனுடைய சிரோஷ்ட உறுப்பினர்கள், கல்விமான்கள் மற்றும் GAFSO நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் I. Abdul Jabbar ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற அரசியல் நிர்வாக பிரச்சினைகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகரோடு கலந்துரையாடப்பட்டது. இதன் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இறுதியாக நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டு இந்நிகழ்வு சிறப்பாக முடிவு பெற்றது.