மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதுடன், நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடிநீர் விநியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப நீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்றும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், நீர் கட்டணமும் கண்டிப்பாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.