அஸ்ஹர் இப்ராஹிம்
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை,கல்முனை வலய மட்ட ஆங்கிலமொழிதினப் போட்டி , நாடகப் போட்டி , சாய்ந்தமருது கோட்டமட்ட விஞ்ஞான வினாடி வினா போட்டி என்பவற்றில் வெற்றியீட்டிய மாணவர்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் திருமதி எம்.ஸிராஸ்.என்.றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் ஏ. எல். எம். தன்சில் சிறப்பு அதிதியாக ஆசிரிய ஆலோசகர் சஹ்ரூன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.