இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமுல்லாகக்கூடிய நிலை ஒன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது
தற்போது நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது.
இவ்வாறு, நாளாந்தம் 2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படாமல் மின்சாரத்தை வழங்கினால், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் மின் பொறியியலாளர் சங்க தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்த பழக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

