உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முட்டாள்தனமாக பேசி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நேற்றைய தினம் (23-02-2023) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இல்லை எனக் கூறி ஆணவத்துடன் செயற்படுவதாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கூறியது போன்று தேர்தல் நடைபெறவில்லை என்றால், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு வேட்புமனுக்களை கையளித்தது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான திகதியை உத்தியோகபூர்வமாக நிர்ணயம் செய்யாத நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
jvpnews.