Ads Area

உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து - பரபரப்புத் தகவலை.

 ராஜபக்ஷர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், அந்தப் பணத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக ஆகிய கட்சிகள் ராஜபக்சவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வருவோம் என கூறினார்கள்.

ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது அவ்வாறான தகவல்கள் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகில் எங்கும் ராஜபக்சர்களுக்கு இதுபோன்ற கணக்குகள் இருப்பதாக இதுவரை எந்தத் தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என தற்போதைய ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

thankstamilwin



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe