Ads Area

வீதியோர மீன் வியாபாரிகளுக்கும் தவிசாளர் மாஹிர் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்.

வீதியோரம் மீன் வியாபாரம் செய்து வருபவர்கள் மீண்டும் ஹிஜ்றா சந்தைக்குள் மீன் வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வீதியோர வியாபாரிகளுடான  கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில்  பிரதான கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.


இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல். எம்.ஜிப்ரி, கே.எல்.சிஹாமா, ஏ.எம்.நபீல், ஏ.ஏ.சீ.எம்.நிஸாம், எம்.ஏ.தம்பிக்கண்டு, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே றம்சின் காரியப்பர், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஏ. ஹக்கீம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.சமீம், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.றாசீக், பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,  மீன் வியாபாரிகள், ஹிஜ்றா பொதுச்சந்தை வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe