Ads Area

ஆபத்தான நிலையில் இலங்கை - அமெரிக்கா தெரிவிப்பு.

 இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல் யெலன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் அவர் உரையாற்றிய  போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் ஆபத்திற்கு அருகில் உள்ளன அல்லது கடன் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க செயலாளர் தெரிவித்துள்ளார்.


வளரும் நாடுகள் மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ள கடன் நிவாரணம் வழங்க சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக செயலாளர் ஜேனட் எல் யெலன் கூறினார்.


இலங்கை மற்றும் செமிபியாவிற்கு மிக அவசரமான கடன் நிவாரணம் தேவை. இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதிச் சான்றிதழ்களை வழங்குவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe