சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக கிராம சக்தி வேலை திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு நுண்கடன் வழங்கும் நிகழ்வானது பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி A.L.M அஸ்லம் அவர்களின் தலைமையில் இன்று (21) Block "J" West -2 ல் இடம்பெற்றது
இந்நிகழ்வில் விடயத்துக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் M.R.M.பௌஸான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.