Ads Area

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியிலிருந்து பறி போகும் பாடநெறிகள்.

முஹமட் ஆசிக்.


சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மதில் பற்றியும் மரம் பற்றியும் பேசுகின்றனர் மிகவும் சந்தோஷம்


 அது போன்று உங்களது ஊர் பற்றை ஏனைய விடயங்களிலும் காட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.


 எமது சம்மாந்துறை மண்ணின் செல்வம் பலருடைய வாழ்க்கை சிறக்க உதவிய‌ சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மீதும் உங்களது கவனத்தை செலுத்துங்கள்.


 அனைத்து விதமான வளங்கள் இருந்த போதும் ஒவ்வொரு பயிற்சி நெறியாக காணாமல் போகிறது தற்போது படிக்கும் மாணவர்களும் பரிட்சை எழுத அம்பாறை ஹார்டி கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும் இடம் மாற்ற‌ வேலை நடைபெறுகிறது. இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியை எமது மண் இழக்க நேரிடும்.


 எமது ஊருக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களே இந்த விடயத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe