Ads Area

சம்மாந்துறையில் துயரம் !! யானைக்கு தொடர்ந்தும் பலியாகிய மற்றுமொரு குடும்பஸ்தர் : இருவர் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில்

 யானைக்கு தொடர்ந்தும் பலியாகிய மற்றுமொரு குடும்பஸ்தர் : இருவர் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில்


சம்மாந்துறை நிருபர் : .எல்.எம்நாஸிம்


 யானைக்காவலுக்காக சம்மாந்துறை  பெரிய கொக்கனாரை வட்டை பகுதிக்கு சென்ற மூன்று நபர்களை இன்று (24) அதிகாலை யானை தாக்கியுள்ளது.


யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


யானை தாக்குதலுக்கு 55 வயதுடைய மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தர்ஒருவரே  சம்பவ இடத்தில் யிரிழந்துள்ளதாக அறிய முடிகிறதுமேலும் மரணித்த அவர் 2 பெண் பிள்ளைகள் மற்றும்ஒரு ஆண் பிள்ளை என 

பிள்ளைகளின் தந்தையும் ஆவார். 


மேலும் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2  கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக தற்போதுசம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்


உடங்கா 2  சேர்ந்த 29 வயதையுடை மற்றுமொறுவர் சம்மாந்துறை ஆதா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்


சம்மாந்துறை பிரதேசத்தில் 2022,2023 காலப்பகுதிகளில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்மாந்துறைபிரதேசம் இழந்த 3ஆவது விவசாயி ன்பதோடு , இது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும்திகமாக இருப்பதால் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு ருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe