Ads Area

தென்கிழக்கு பல்கலையில் விரிவுரையாளர்களுக்கான மனித வள மேம்பாட்டு நிகழ்வு!

 மாளிகைக்காடு நிருபர் நூருள் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துகொண்ட ஒரு தொகுதி விரிவுரையாளர்களுக்கான  மனித வள மேம்பாட்டு நிகழ்வு (Induction Programme for Academic Staff -  2023 Batch vi) 2023-02.23 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் ஊழியர் மேம்பாட்டு மையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் முதல்நாள் விரிவுரையையும் நிகழ்த்தினார்.

உபவேந்தர் தனது உரையில் கல்விசார் உத்தியோகதர்கள் அறிந்திருக்க வேண்டிய மற்றும் தனது தொழில் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சகல செயற்பாடுகள் குறித்த தெளிவான தகவல்களை பகிர்வதே இந்த மனித வள மேம்பாட்டு நிகழ்வின் குறிக்கோள்ளாகும் என்று கருத்து வெளியிட்டார். அவர் மேலும் பேசுகையில், 

இளம் விரிவுரையாளர்களான பங்குபற்றுனர்கள் அதிகமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் முடியுமானவர்கள் உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டப்பின் படிப்புகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். 

நிகழ்வு தொடர்பான முழுமையான தகவல்களை நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட  கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் விபரமாக எடுத்துரைத்தார்.

விரிவுரையாளர்களின் வினைத்திறனை மேலும் அதிகரிப்பது; மற்றும் பல்கலைகழக முறைமைகள் தொடர்பான முழுமையான அறிவை விரிவுரையாளர்களுக்கு வழங்கும் நோக்கிலும் இதுவரையும் ஐந்து தொகுதி விரிவுரையாளர்களுக்கு ஊழியர் மேம்பாட்டு மையத்தினால் இதனை ஒத்த நிகழ்வு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்  எஸ். பிரசாந்த் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற  ஆறாவது தொகுதி விரிவுரையாளர்களுக்கான பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வில்; பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்., மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் அஹமட் சர்ஜூன் றாசீக் ஆகியோருடன் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர் ஒ.எல்.எம். முனவ்வர் அவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக  இணைந்திருந்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe