Ads Area

கல்முனையன்ஸ் போரமினால் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் மாநாடு - 2023.

 நூருல் ஹுதா உமர்


க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடுத்து எவ்வாறான உயர்கல்வி வாய்ப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் விளக்கங்களை அளிக்கும் வழிகாட்டல் மாநாடு கல்முனையன்ஸ் போரமினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கல்முனை ஆஷாத் ப்ளாசா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அரச பல்கலைக்கழகங்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரிகள், இராணுவ பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசசார் கல்வி நிறுவனங்களில் இலகுவழியில் கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பெறும் வழிகளையும், குறித்த துறைகளில் துறைசார் வல்லுனர்களாக மிளிர்வதற்கான வழிகளும் அனுபவமிக்க அத்துறைசார் வளவாளர்களைக்கொண்டு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் களுவாஞ்சிக்குடி போன்ற பல ஊர்களிலுருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe