உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் (09) வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உறையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உள்ளுராட்சிசபைத் தேர்தல் தொடர்பில் தற்போது கருத்துரைக்கும் எதிர்தரப்பினர் தான் 2018 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு துணைபோனார்கள் என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல அவர் பாராளுமன்றத்தின் 134 உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஆகவே, அவர் எவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்த முடியும் என கேட்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை தொடர்பில் டி.பி. விஜேதுங்க பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்,அவர் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பயன்படுத்தி யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்,ஆகவே ஜனாதிபதி பதவி விவகாரத்தில் மக்களால் தெரிவு,பாராளுமன்ற தெரிவு என வேறுபாடுகள் கிடையாது என்றார்.
thanks-jaffnamuslim