Ads Area

உலக காசநோய் தடுப்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலமும், கலந்துரையாடலும்

 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக உலக காசநோய் தடுப்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் புதன்கிழமை (22) கல்முனை மாவட்ட மார்பு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. எல் அப்துல் கபூர் அவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமும் காச நோயை ஒழிப்பதற்கான கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் வைத்தியர் ஏ.எச்.எம். மபாஸ் அவர்களினால் காச நோய் தொடர்பில் விளக்கக் காட்சி ஒன்றும் நடாத்தப்பட்டது.

சம்மாந்துறை கமு/சது/அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் தொடங்கிய குறித்த பேரணி மாவட்ட மார்பு சிகிச்சை நிலையம் வரை பயணித்தது பணிப்பாளர் சார்பில் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித் அவர்களுடன் மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம் எம் நௌசாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வான்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ எஸ் எம் பௌசாத், பாலியல் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் என் எம் தில்ஷான், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ நபீல், வைத்தியர் டி ஆர் எஸ் டி எஸ் ரஜப், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம் ஹனிபா, உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம். இப்ஹாம், ஏனைய வைத்தியர்களும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.கபீர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்கள் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் என பெருமளவிலான சுகாதார உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe