சம்மாந்துறை பிரதேச சபையினால் பராமரிக்கப்படும் விலங்கறுமனை இறைச்சிக்காக மாடு அறுக்கின்ற போது ஏற்பாடும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர், கால்நடை வைத்திய அதிகாரி ஏ.எம்.ஜிப்ரி, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எம்.எம்.றியாஸ், எஸ்.நளீம், எம்.ஏ.தம்பிக்கண்டு, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.றம்சின் காரியப்பர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர், சம்மாந்துறை வர்த்தக சம்மேளத்தின் தலைவர் ஏ.ஹக்கீம், செயலாளர் எம்.எச்.எம்.ஹாரிஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.