Ads Area

காரைதீவு மீனவர்களின் தேவைகளை தீர்க்கின்ற முயற்சிகள் முன்னெடுப்பு.

 நூருல் ஹுதா உமர்


 காரைதீவு பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், வருமானம்,  பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பான வேலை திட்டங்களை ஆராய்வதற்கு Cross Ethnic Community  மனித நேய தொண்டு ஸ்தாபனம் திங்கட்கிழமை காரைதீவுக்கு கள விஜயம் மேற்கொண்டது.


மேற்படி மனித நேய தொண்டு ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சதீஸ் நேரில் வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்தார். அத்துடன் மீனவர்களின் துன்பங்கள், பிரச்சினைகள்,  கோரிக்கைகள் ஆகியவற்றை கவனமாக செவிமடுத்தார்.


முதல் கட்டமாக பயனாளிகளை தெரிவு செய்து மாலை நேர மீன்பிடிக்கான சிறிய ரக தோணிகளை பாவனைக்கு வழங்குவது குறித்து சாதகமாக பரிசீலிப்பதாகவும், கட்டம் கட்டமாக மீனவ உறவுகளின் தேவைகளை நிறைவு செய்து தர முயற்சிப்பதாகவும் இணைப்பாளர் சதீஸ் நிறைவாக தெரிவித்தார்.


Cross Ethnic Community  மனித நேய தொண்டு ஸ்தாபனம் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனித நேயத்தை முன்னிறுத்தி சர்வதேச ரீதியாக தேவை உடைய மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றி வருகின்றது.


இன பேதங்களை களைந்து மக்களை இணைப்பது இதன் தூர நோக்கு ஆகும். ஸ்கொட்லாந்தில் ஆபிரிக்கர் மற்றும் ஆசிய மக்கள் குழுக்களை இணைக்கின்ற வேலை திட்டங்களை மும்முரமாக முன்னெடுக்கின்றது.


அதே போல இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவு பாலமாக பரிணமிக்கின்ற வகையில் ஏராளமான பல வேலை திட்டங்களை மேற்கொள்கின்றது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe