Ads Area

நிந்தவூர் இளைஞர் ஐக்கியநாடுகள் சபையின் வியன்னா மாநாட்டில் பங்கேற்பு.

 நூருள் ஹுதா உமர்


இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரியா- வியன்னா சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார்.

நிந்தவூர் 13ம் பிரிவு, பிரதான வீதியைச் சேர்ந்தவரும், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின், கடற்கரை மற்றும் கடல்வள முகாமைத்துவ பீடத்தின் மாணவராக பயிலும் ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் 2023ம் வருடத்திற்கான ஐக்கியநாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பிலான அமைப்பின் ( United Nation Office on Drug and Crime - UNODC) தொடர்பான மூன்று நாட்கள் (13.03.2023 - 16.03.2023) சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இவ்வருடம் குறித்த இளைஞர் மாநாட்டில் சர்வதேச அளவில் 27 நாடுகள் பங்கேற்கத் தெரிவாகியிருந்தன. இம்மாநாட்டில் நமது இளைஞர் ஜெம்ஷித் ஹஸன் இலங்கை சார்பிலும், தெற்காசிய பிராந்தியத்தின் சார்பிலும் பலத்த பலப்பரீட்சைகளுக்கு மத்தியில் ஏக பிரதிநிதியாக தமிழ் பேசும் ஒருவராய் இந்த மாநாட்டிற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாநாட்டில் கலந்துகொண்ட தன் பெறுபேறாக எதிர்காலங்களில் நமது ஜெம்ஷித் ஹஸன் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுத்தல் அமைப்பின் ( UNODC) இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக செயல்படத் தெரிவாகியுள்ளார். நிந்தவூர் மண்ணிலிருந்து இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகள் சார்பாக ஐக்கியநாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் நமது நிந்தவூர் மண்ணின் மைந்தனது குரல் ஒலித்தமையானது வரலாற்றின் ஒரு மைல் கல்லாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe