Ads Area

சாய்ந்தமருதின் முதுசம் வை.எம்.ஹனீபா அவர்களின் பெயரை சாய்ந்தமருது வீதியொன்றுக்கு சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 (   அஸ்ஹர் இப்ராஹிம்  )



சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த ஓய்வுபெற்ற அதிபர்  மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் பெயரை சாய்ந்தமருதிலுள்ள வீதியொன்றுக்கு சூட்டுமாறு சாய்ந்தமருதிலுள்ள பொது அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.


இதற்கு மேலதிகமாக கல்முனை   மாநகர சபையின் 49ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வின் போது மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.ஏ.அப்துல் றபீக் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.


இதன்படி, சாய்ந்தமருது-16 ஆம் பிரிவில் அமைந்துள்ள வீ.எச்.வீதியில் தொடங்கி தாமரை வீதி வரை செல்லும் பாதைக்கு மர்ஹூம் வை.எம்.ஹனிபா வீதி என்று பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe