உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்கான கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

