Ads Area

சாய்ந்தமருதில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம். | Free Ayurvedic Medicine Camp in Sainthamaru.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்  சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நெறிப்படுத்தலில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம்.ஐ.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் உதவி  பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஏ.டவுள்யூ.வாஜீத், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. எம். நபீல், சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.ரிஷாட்,  தலைமை பீட  சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம்,  சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ மஜீத்,  பிரதம  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன்,  சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என  பலரும்  கலந்து கொண்டனர்.


இவ் வைத்திய முகாமில் 06 பேர் கொண்ட ஆயுர்வேத வைத்திய குழாம் மூலம் பொதுமக்களுக்கு வைத்திய ஆலோசனைகளும், மருந்துகளும்  வழங்கி வைக்கப்பட்டதுடன் தொற்ற நோய்கள் தொடர்பாக நோயாளிகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டு மாத மாதம் கிளினிக் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe