டுபாயில் உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் ஒரு நாள் வாடகையாக ரூ.82 இ லட்சம் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற டுபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 இலட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகிறது.
இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில் உலகின் உயரமான கட்டிடம் என கூறப்படும் புர்ஜ் கலீபாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது ‘அட்லாண்டிஸ் தி ராயல்’ என்ற நட்சத்திர விடுதியும் சேர்ந்துள்ளது.
இந்த விடுதியின் நுழைவாயில் முதல் குளியல் அறையில் உள்ள சோப்பு வரை எல்லாமே உலகிலேயே விலை உயர்ந்தவை ஆகும். இந்த நட்சத்திர விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகையாக 1,000 டொலர் ( சுமார் ரூ.82 ஆயிரம்) முதல் 1 இலட்சம் டொலர்( ரூ.82 இலட்சம்) வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது இதுவே உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
thanks-thinakkural