Ads Area

தேர்தலுக்கான புதிய திகதி! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு! New date for election!

 தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.

எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe