ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜெர்மனி சான்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி விசா வழங்குவதை விரைவுபடுத்த விரும்புகிறது. இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தோருக்கான முக்கியத் தடைகளைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காவே இப்புதிய சட்டத்தின் நோக்கமாகும், இதில் கல்விச் சான்றுகளை அங்கீகரிப்பது தொடர்பான சிக்கலான செயல்முறையும் அடங்குவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி, உலகின் பிற முக்கியத் தொழில்துறை நாடுகளைப் போலவே, அதிகப்படியான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தற்போது பிரிட்டன் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாகத் திறமையான உயர்-வளர்ச்சித் துறைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.

