லிட்ரோ காஸ் விலையில் நாளை (5) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை ஏறினாலும் சரி, குறைந்தாலும் அது பெரிய தொகையாக இருக்காது எனவும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்குவேன் என நம்புவதாகத் தெரிவித்த முதித பீரிஸ், நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.