Ads Area

பாலியல் நோய்களை முற்றாக ஒழிப்பதற்காக அறைகூவல் நிகழ்வு.

 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வும், கேள்வி பதில் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை பணிமனை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம வளவாளராக பிராந்திய பாலியல் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் என் எம் தில்ஷான் கலந்து கொண்டதுடன் இத்துறையில் தாம் அனுபவிக்கும் கஸ்டங்களையும் சவால்களையும் விரிவாக விவரித்தார்.

நிகழ்வில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் பணிப்பாளர் சார்பாக விசேட உரை ஒன்றை நிகழ்த்தியதுடன் மாவட்ட மார்பு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல் அப்துல் கபூர் அவர்களும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு சிறப்பான உரையை வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe