Ads Area

தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு !

 நூருல் ஹுதா உமர்


கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் (ஹிஜ்ரி 1444 றமழான் 17) பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபகமும் பாத்திமதுஸ் ஸஹ்றா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரும்,  தாறுஸ்ஸபா அமைய தலைவருமான ஏ.ஆர்.ஸபா முஹம்மட் (நஜாஹி, அல்-காதிரி) அவர்களின் தலைமையில் நேற்று (09) இடம்பெற்றது.


புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிசினை தொடந்து கொடியேற்றப்பட்டதுடன் வருடாந்த இப்தார் வைபகமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான 


எம்.எச்.எம்.ஏ. மனாப், சமட் ஹமீட், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம். சித்திக், ஊடக அமைப்புகளின் பிரதானிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்பாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள், கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe